Enable Javscript for better performance
ஜஹாங்கீர்புரி ஆலையில் தீ விபத்து - Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஜஹாங்கீர்புரி தனியார் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில்  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

    ஜஹாங்கீர்புரி மஹேந்திரா பார்க்கில் ரெக்ஸின் ஷீட் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் அத் தொழிற்சாலையில் உள்ள பாய்லரில் திடீரென தீ பிடித்தது. இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், மற்ற பாய்லர்கள், உபகரணங்கள், மின்சார வயர்களிலும் தீ வேகமாக பரவியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "இத் தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும், தொழிற்சாலையில் இருந்த உபகரணங்கள் தீயில் எரிந்து விட்டன. அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிய வந்துள்ளது. தீயணைப்புப் பணியில் 12 தீயணைப்பு வண்டிகளும் 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் பணியில் ஈடுபட்டனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai