Enable Javscript for better performance
தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார்

    By dn  |   Published on : 16th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் தலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கண்டனம் தெரிவித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை முயன்றனர். இதில் தில்லி போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    முன்னதாக, தில்லி பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஹாரூண் யூசுஃப் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நிஜாமுதீன் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கூடினர். அங்கிருந்து சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ஆனால், அவர்களை தில்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹாரூண் யூசுஃப் பேசுகையில், "காங்கிரஸ் தலைமை குறித்த சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் தரம் தாழ்ந்தவையாக உள்ளன. மனநிலை சரியில்லாதவர் போல கருத்துத் தெரிவித்துள்ள அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது போன்ற பாஜக தலைவர்களின் கருத்துகளால் தேர்தல் பிரசாரம் நான்காம் தரத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளால் சமூகத்தில் அமைதியின்மையும், தேர்தல் சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளன.

    அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் சுப்பிரமணியன் சுவாமி மன்னிப்புக்  கேட்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் சுரேந்தர் குமார், தர்விந்தர் சிங் மார்வா, ஹரி சங்கர் குப்தா, ராஜேஷ் லிலோத்யா, நரேந்திர நாத், வீர் சிங், அம்ரீஷ் கெüதம், ராஜேஷ் ஜெயின், பிஜேந்திர சிங், பீஷ்ம சர்மா, நேரு பிரிகேட் அமைப்பாளர் ரமேஷ் தத்தா, தில்லி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் முகேஷ் கோயல், வர்யம் கொர், ஃபர்ஹாத் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai