Enable Javscript for better performance
தில்லி மருத்துவ மாணவியின் மரண வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மருத்துவ மாணவியின் மரண வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 16th April 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில், ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட துணை மருத்துவ மாணவியின் மரண வாக்குமூலத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தில்லி போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முகேஷ், பவன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், ஜே. செலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு, பாதிக்கப்பட்ட மாணவியின் மரண வாக்குமூலமே போதுமானதாக இருந்தால், இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட வேண்டியதில்லை. மாணவியின் மரண வாக்குமூலத்தை தில்லி போலீஸார் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

    பின்னணி: தில்லியில் 2012ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வந்தபோது உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை தில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு மூன்று ஆண்டுகள் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai