Enable Javscript for better performance
தீயணைப்புத் துறை வாரம் தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் தீயணைப்புத் துறை வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

    இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் அமீது அன்சாரியை தில்லி தீயணைப்புத் துறை இயக்குநர் ஏ.கே. சர்மா செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

    அப்போது, தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் உடன் சென்றனர்.

    தில்லி தீயணைப்புத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள், தீ விபத்துகளை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை குடியரசு துணைத் தலைவரிடம் சர்மா எடுத்துரைத்தார்.

    தில்லி தீயணைப்புத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குழு இன்சூரன்ஸ், நலத் திட்டங்கள், தீ விபத்துகளில் உயரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான பிற நிதி உதவி ஆகியவற்றுக்காக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நன்கொடை அளித்தார்.

    ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு தீயணைப்புத் துறை வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai