Enable Javscript for better performance
பஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    பஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு

    By dn  |   Published on : 16th April 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பஸ் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    தில்லியைச் சேர்ந்தவர் பிரியா ஜெயின். இவர் தில்லியில் அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பஸ் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து 2011, நவம்பர் 23-ஆம் தேதி நிகழ்ந்தது.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட பஸ் வாகனத்தின் ஓட்டுநர், டிடிசி நிறுவனம், பஸ்ஸூக்கு காப்பீடு செய்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை இழப்பீடு வழங்கக் கோரி பிரியா ஜெயினின் பெற்றோர் மம்தா ஜெயின், தீபக் ஜெயின் ஆகியோர் மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையின்போது தீபக் ஜெயின் காலமாகிவிட்டார். வழக்கை பிரியா ஜெயினின் தாய் மம்தா ஜெயின் தொடர்ந்து நடத்தினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மோட்டார் வாகன விபத்து கோரல் தீர்ப்பாயத் தலைவர் ரவீந்தர் பேடி அளித்த உத்தரவு:

    "சம்பவத்தன்று பஸ்ஸை அதன் ஓட்டுநர் வேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டி வந்தததால்தான் விபத்து நேரிட்டது என்பது போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, பிரதேப் பரிசோதனை அறிக்கை, இயந்திர ஆய்வு அறிக்கை ஆகியவை மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, பஸ்ஸூக்கு காப்பீடு செய்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் உயிரிழந்த பிரியா ஜெயினின் தாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.12,42,288 வழங்க வேண்டும்' என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai