Enable Javscript for better performance
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

    By dn  |   Published on : 16th April 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

    திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது பெண் ஒருவர், தில்லியைச் சேர்ந்த பீம் என்பவர் மீது போலீஸில் புகார் அளித்தார்.  இதையடுத்து, பாலியல் பலாத்காரம், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பீமை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நிவேதிதா அனில் சர்மா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    பீம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், "மாயாபுரியில் உள்ள தொழிற்சாலையில் பீம் பணிபுரிந்துவருகிறார். அப் பகுதியில்தான் புகார் அளித்துள்ள 19 வயதான பெண்ணுடன் பீமுக்கு நட்பு ஏற்பட்டது. அதன்பின் அப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததன் பேரில், இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. எனினும், அப் பெண் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார்' என்றார்.அதன் பின் அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "சம்பவம் நடைபெற்றபோது, அப் பெண் "மேஜர்' என்ற நிலையை அடைந்துள்ளார். இருவருக்கும் தெரிந்தே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கோ, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, குற்றம்சாட்டப்பட்டவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai