Enable Javscript for better performance
பாலியல் பலாத்கார வழக்கில் பிஎஸ்பி எம்.பி.க்கு இடைக்கால ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கில் பிஎஸ்பி எம்.பி.க்கு இடைக்கால ஜாமீன்

    By dn  |   Published on : 16th April 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) எம்.பி. தனஞ்ஜய் சிங்கிற்கு மே 20-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    உத்தர பிரதேசம், ஜான்பூர் மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் தனஞ்ஜய் சிங். இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் புகார் அளித்தார். அதில், தனஞ்ஜெய் சிங் தன்னை துப்பாக்கி முனையில் ஜூலை 2005 முதல் மார்ச் 2009 வரை பலமுறை பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், அவர் அச்சுறுத்தியதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இது தொடர்பான வழக்கில் போலீஸார் ஜனவரி 31-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

    இந் நிலையில், ஜான்பூர் தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனஞ்ஜய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, தனஞ்ஜெய் மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக புகார் அளித்திருந்த பெண் தெரிவித்தார். தன்னுடைய உறவினர்கள் கொடுத்த நெருக்குதலின் பேரிலேயே தனஞ்ஜய் சிங் மீது தாம் புகார் அளித்திருந்ததாகவும், தன்னை அவர் பாலியல் பலாத்காரம் ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, ரூ. 50 ஆயிரத்திற்கு சொந்த ஜாமீன் பத்திரமும் அதே தொகைக்கு ஒரு நபரின் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தனஞ்ஜய் சிங்கிற்கு மே 20-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சரிதா பீர்பல் உத்தரவிட்டார்.

    தில்லியில் வீட்டுப் பணிப் பெண் ராக்கி பத்ரா (35) கொலை வழக்கிலும்  தனஞ்ஜய் சிங்கிற்கு ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தாற்காலிக ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai