Enable Javscript for better performance
பிரதமர் பற்றிய நூல் துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    பிரதமர் பற்றிய நூல் துரோகம் இழைத்துவிட்டார் சஞ்சய பாரு: மன்மோகன் மகள் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 16th April 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "எனது தந்தையும் பிரதமருமான மன்மோகன் சிங் குறித்து அவரது அலுவலக ஊடகப் பிரிவு முன்னாள் ஆலோசகர் சஞ்சய பாரு எழுதி வெளியிட்ட நூல் உள்நோக்கம் கொண்டதும், நம்பியவர்களின் முதுகில் குத்துவது போன்ற துரோகச் செயலுமாகும்' என மன்மோகன் சிங்கின் மகள் உபிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

    பிரதமர் அலுவலக ஊடகப் பிரிவு ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சஞ்ச/ பாரு, மன்மோகன் சிங்கின் தலைமையில் தனது பணி அனுபவங்களைத் தொகுத்து அண்மையில் நூலாக வெளியிட்டார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

    இந்நிலையில், தில்லி பல்கலைக்கழக  வரலாற்றுத்துறை பேராசிரியையும் பிரதமர் மன்மோகனின் மகளுமான உபிந்தர் சிங், "இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    சஞ்சய பாருவின் நூல் மரபுகளை மீறியும், தவறான உள்நோக்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமரின் நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் இருக்கிறது. கிசுகிசுக்களையும், எனது தந்தையின் கருத்துகள் தொடர்பான உறுதிப்படுத்தாத ஆதாரங்களை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார்.

    செய்திகளில் வெளியான பிரதமரின் பேச்சுகளை தன்னிடமே (சஞ்சய பாரு) பேசியதுபோல மிக தைரியமாக நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    பிரதமர் அலுவலகத்தில் முடிவெடுக்கப்படும் விவகாரங்களில் பாருவுக்கு எந்தவொரு பங்கும் இருந்ததில்லை. முக்கிய ஆவணங்களைப் பார்வையிடும் அதிகாரமும் இல்லை.

    பிரதமரின் முதன்மைச் செயலரைப் போல அவர் பாவனை செய்திருப்பது உண்மையில்லை. மிகைப்படுத்தப்பட்ட அவரது செயலால் நாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறோம். பிரதமரின் நலன்விரும்பி என அவர் சொல்லிக் கொள்ளக் கூடாது.    

    மக்களவைத் தேர்தல் சமயத்தில் இப்படியொரு நூலை சஞ்சய பாரு வெளியிடுவதற்கு என்ன அவசியம் உள்ளது? இதற்கு அரசியல் காரணங்கள் இல்லை என்று மறுத்தால் அது  முட்டாள்தனமாகும்.

    பிரதமர் அலுவலகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

    இப்படியொரு நூலை அவர் எழுதி வருகிறார் என்பது எனக்கு முன்பே தெரியும்.

    நூலை எப்போது வெளியிடப் போவதாக உத்தேசம் என்று அவரிடம் கேட்டதற்கு, "நிச்சயமாக தேர்தலுக்குப் பிறகுதான்' என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக இப்போது வெளியிட்டுள்ளார். இதற்கு பதிப்பாளர்கள் மீது பொறுப்பைச் சுமத்துகிறார் என்றார் உபீந்தர் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai