Enable Javscript for better performance
முதியோர் காப்பகத் தீ விபத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் காப்பகத் தீ விபத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ்

    By dn  |   Published on : 16th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி வசந்த் குஞ்ஜ் பகுதியில் முதியோர் காப்பகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கும் காவல் துறைக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    வசந்த் குஞ்ஜ் பகுதியில் இருந்த முதியோர் காப்பகத்தில் 10 கூடாரங்கள் அமைக்கப்பட்டு பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 150 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இக் காப்பகத்தை "எர்த் ஸேவியர் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம் நடத்திவந்தது. இங்கு அண்மையில்  ஏற்பட்ட தீவிபத்தில் ரமேஷ் சந்த் (60), பூனம் (27) ஆகிய இருவர் இறந்தனர். இதில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டனர். சிலர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது. இதைத் தானாக முன்வந்து என்ஹெச்ஆர்சி விசாரித்தது. இதைத் தொடர்ந்து, தில்லி அரசின் தலைமைச் செயலாளர், தில்லி காவல் ஆணையர் ஆகியோருக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    "ஊடகங்களில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மனித உரிமை மீறலாகவே கருதப்படும். எனவே, இது குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று அந்த நோட்டீஸில் என்ஹெச்ஆர்சி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai