Enable Javscript for better performance
மோடி ஒரு சர்வாதிகாரி: காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை சர்வாதிகாரி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    தில்லியில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தன்னைக் கண்டு காங்கிரஸ் கட்சி நடுங்குவதாக தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், தனக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

    நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி ஆவார். அதனால்தான் இதுபோன்று அவர் பேசுகிறார். மோடி வாழ்க என்ற கோஷம், தற்போது மோடி பயம் என்பதாக மாறியுள்ளது. அனைவரும் அவரைக் கண்டு பயப்படுகின்றனர்.

    பாஜக மூத்த தலைவர் உமாபாரதி, பாஜக ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேரா (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன், பிரியங்காவின் கணவர்) சிறைக்கு அனுப்பப்படுவார் என கூறியுள்ளார். எனவே இந்த 2 சர்வாதிகாரிகளும் சேர்ந்தால், சட்டம், நீதிமன்றம், வழக்கு விசாரணை, மேல்முறையீடு என்று எதுவும் இருக்காது. அனைவரையும் அவர் (மோடி) சிறைக்கு அனுப்பி விடுவார் என்றார் அபிஷேக் சிங்வி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai