Enable Javscript for better performance
ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக மின் கணக்கீட்டாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மின் திருட்டுக் குற்றத்தை மூடி மறைக்க ரூ. 10,000 லஞ்சம் பெற்றதாக மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி ஊழல் தடுப்புத் துறை கூடுதல் ஆணையர் வி.ரங்கநாதன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி ரஜோகாரியைச் சேர்ந்தவர் அமித் யாதவ். பிஎஸ்இஎஸ் ராஜதானி பவர் என்ற தனியார் நிறுவனத்தில் கள ஆய்வாளராகவும், மின் கணக்கீட்டாளராகவும் பணியாற்றி வந்தார். கள ஆய்வில் இருந்த போது ஒரு வீட்டில் மின் திருட்டு நடந்ததைக் கண்டுபிடித்து அமித்யாதவ் விசாரணை நடத்தினார்.

    அப்போது, "மின் திருட்டு சம்பவத்தை மூடி மறைக்க தனக்கு ரூ. 50,000 பணம் தர வேண்டும்' என்று உரிமையாளரிடம் அவர் கேட்டுள்ளார். இதையடுத்து, வீட்டு உரிமையாளர் ரூ. 20,000 அளித்துள்ளார். இந் நிலையில், வீட்டு உரிமையாளர் எங்களைத் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைத் தெரிவித்தார்.

    உடனடியாக, எஞ்சிய பணத்தைத் தருவதற்காக ரசாயனம் தடவிய ரூபாயை அவரிடம் தந்து அமித் யாதவை சந்திக்கும்படி கூறினோம். அதன்படி அவர் பணத்தைத் தந்தபோது, ஊழல் தடுப்புத் துறை போலீஸார் மறைந்திருந்து அமித் யாதவை கையும் களவுமாக பிடித்தனர் என்றார் ரங்கநாதன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai