Enable Javscript for better performance
50 வயது மாப்பிள்ளையை ஏற்க மறுத்து திருமணத்தை நிறுத்திய இளம் பெண்- Dinamani

சுடச்சுட

    

    50 வயது மாப்பிள்ளையை ஏற்க மறுத்து திருமணத்தை நிறுத்திய இளம் பெண்

    By dn  |   Published on : 16th April 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    50 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து, இளம் பெண் ஒருவர் தன் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

    தேசிய தலைநகர் வலயம், காஜியாபாத் அருகே அசோதா கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணுக்கும் நஹாலி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபருக்கும் திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். மணமகனின் வயது குறித்து பெண்ணிடம், அவரது பெற்றோர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந் நிலையில் திங்கள்கிழமை மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது மணப் பெண் முதல்முறையாக மாப்பிள்ளையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, தன் பெற்றோரிடம் தன் மறுப்பைத் தெரிவித்து, திருமணத்தை நிறுத்துமாறு கூறினார்.

    மேலும், ஊர்வலம் நடைபெற்ற இடத்தில் இருந்து, மணப் பெண் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள கிராம மக்கள் கூறுகையில், "மணப் பெண் குடும்பத்தார் மிகவும் ஏழ்மையானவர்கள். இதனால், இத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். மணமகன் 50 வயதுடையவர் என்பது தெரிந்ததும், அப் பெண் தைரியமாகச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து, கிராமப் பஞ்சாயத்து கூட்டப்பட்டு அப் பெண்ணை சம்மதிக்க வைக்க முயன்றனர். எனினும், அப் பெண் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai