Enable Javscript for better performance
\\\"எல்என்ஜேபி\\\' மருத்துவமனையில் துணை நிலை ஆளுநர் ஆய்வு - Dinamani

சுடச்சுட

    

    "எல்என்ஜேபி' மருத்துவமனையில் துணை நிலை ஆளுநர் ஆய்வு

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் செவ்வாய்க்கிழமை  ஆய்வு மேற்கொண்டார்.

    தலைநகரில் "எல்என்ஜிஜேபி' மருத்துவமனை, குரு தேஜ் பகதூர் மருத்துவமனை ஆகிய இரண்டையும் முன்னோடி மாதிரி மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டது. அந்த மருத்துவமனைகளின் நடைமுறைகள், வசதிகள் குறித்து அறிய கடந்த மார்ச் மாதம் ஆய்வுக் கூட்டத்தை துணை நிலை ஆளுநர் நடத்தினார். அப்போது நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கும் வகையிலும் இம் மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்து, அரசுச் செயலாளர் (நிதி) தலைமையில் அரசின் சுகாதாரம், பொதுப்பணித் துறைச் செயலாளர்களை உறுப்பினர்களாக உள்ளடக்கிய குழுவையும் அமைத்து உத்தரவிட்டார். அப்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் தலைநகரில் உள்ள இந்த இரு மருத்துவமனைகளையும் மேம்படுத்துப்படி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக் கெடுவையும் துணை நிலை ஆளுநர் விதித்தார்.

    இந் நிலையில், துணை நிலை ஆளுநர் எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அம் மருத்துவமனையில் உள்ள மருத்துவ சிகிச்சைக்கான வசதி, கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், அங்கு புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவையும் பார்வையிட்டார். நோயாளிகளின் தேவை, வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அதை மேலும் மேம்படுத்தி கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகத்திற்கு யோசனைகளையும் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் உள்ள உணவுக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு உணவுப் பறிமாறப்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். உணவின் தரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு உதவுமாறு தில்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.

    லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை முன்பு இர்வின் மருத்துவமனை என்ற பெயரில் இருந்தது. இங்கு சராசரியாக தினமும் சுமார் 25,000 பேர் மருத்துவ வசதி பெறுவதற்காக இம் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai