Enable Javscript for better performance
கூர்நோக்கு இல்ல பாதுகாப்புக்கென சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கூர்நோக்கு இல்ல பாதுகாப்புக்கென சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகரில் அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் பாதுகாப்புக்கென சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று தில்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தில்லியில் உள்ள ஒரு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 30 சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. அந்த இல்லத்தில் இருந்த பொருள்களை எரித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். மேலும், இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள் (சிறார்கள்) இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள், மது, போதைப் பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறார் தப்பிச் சென்ற சம்பவத்தை தானாக முன்வந்து தில்லி உயர் நீதிமன்றம் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    அப்போது, கூர்நோக்கு இல்லங்களில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தில்லி பிரதேச அரசுக்கும், காவல் துறைக்கும் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக நிலவர அறிக்கையை தில்லி பிரதேச மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை தாக்கல் செய்திருந்தது. அதில், கூர்நோக்கு இல்லங்களில் உயிர் பாதுகாப்பு, உடைமைக்கான பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மகளிர் துறையுடன் ஒத்துழைத்து இயங்கும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக உதவி காவல் ஆணையர் தலைமையிலான அதிகாரியின் கீழ் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

    இது தொடர்பான விசாரணை தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ரவீந்திரா பட், ஆர்.வி. ஈஷ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா, "கூர்நோக்கு இல்லங்களில் எழும் பிரச்னைகளைச் சமாளிக்கும் வகையில் உதவி காவல் ஆணையர் தலைமையிலான காவல் கட்டுபாட்டு அறை தில்லி காவல் துறையின் கீழ்  செயல்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், "தில்லியில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் உள்ளோரின் உயிர் பாதுகாப்பு, உடைமை பாதுகாப்புக்கான பிரச்னைகளுக்காகவும், அவசரச் சூழல் எழும் போது அதைச் சமாளிக்கும் வகையிலும் ஒரு சிறப்புப்   பிரிவை தில்லி காவல் துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் கூறுவதுபோல் இதற்கான தற்போதுள்ள பிரிவு உரிய வகையில் செயல்படவில்லை என்பதை கூர்நோக்கு இல்லங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன. தொடக்கத்தில் இச் சிறப்புப் பிரிவை காவல் துறைக்குள் மட்டும் ஏற்படுத்த முடியும். கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சூழல் பற்றி அவர்களுக்கு கல்வியறிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். பின்னர், அதை ஒரு தனி பிரிவாக ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai