Enable Javscript for better performance
தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    By புது தில்லி  |   Published on : 17th April 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு தில்லி கஞ்சாவாலா பகுதியில் தில்லி போலீஸ் தலைமைக் காவலர் அனில் குமார் (45) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக தில்லி போலீஸ் கூடுதல் ஆணையர் சஞ்சய் குமார் புதன்கிழமை கூறியது: கஞ்சாவாலா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக அனில் குமார் கடந்த 21 மாதங்களாகப் பணியாற்றி வந்தார். இந் நிலையில், அப் பகுதியில் உள்ள காளி மாதா கோயிலுக்கு புதன்கிழமை காலை சென்றார். வழிப்பாட்டுக்குப் பிறகு கோயில் வளாகத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பான கடிதம் எதுவும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்படவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.

    ஹரியாணா மாநிலம், சோனிபட் பகுதியைச் சேர்ந்த அனில் குமார், தில்லி காவல் துறையில் 1998-ஆம் ஆண்டு சேர்ந்தார். மேற்கு தில்லி சுதந்திரா நகரில் வசித்து வந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai