Enable Javscript for better performance
நகை பறிப்பு:இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்û ளயர்களை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி தெற்கு மாவட்டக் காவல் துணை ஆணையர் பி.எஸ்.ஜெய்ஸ்வால் கூறியதாவது:

    தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லி பகுதிகளில் நகை பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவி (24), சூரஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தெற்கு தில்லி மாவட்ட போலீஸின் சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

    அவர்கள் இருவரிடமும் இருந்து ஒரு தாலி கயிறு உள்பட 18 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்கள் ஆர்.கே.புரம், மெஹ்ரெüலி, மாளவியா நகர், வி.கே.சவுத், கால்காஜி உள்ளிட்ட பல பகுதிகளில் வழிப்பறி  கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  குறிப்பாக சந்தைப் பகுதி, கோயில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    இருவர் மீதும் நகைப் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் உள்பட 36 வழக்குகள் இருந்தன. இப்போது அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்றார் ஜெய்ஸ்வால்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai