Enable Javscript for better performance
பாஜக பிரசாரத்தில் கருப்புப் பணம் தாராளப் புழக்கம்: கபில் சிபல்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக பிரசாரத்தில் கருப்புப் பணம் தாராளப் புழக்கம்: கபில் சிபல்

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை பாஜக செலவிடுவதாக மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

    மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரசார செலவு சுமார் ரூ.5,000 கோடியை விஞ்சும் என அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள்கூட பேசிக் கொள்கின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே பாஜகவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை அக்கட்சி செலவிட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டுமே அவரது பிரசார செலவு ரூ.300 கோடிக்கும் அதிகமாகும்.

    தேர்தல் விதிமுறைகள் அமலாவதற்கு முன்பாகவே இந்த அளவுக்கு அவர்கள் (பாஜக) செலவு செய்தார்கள் என்றால் இப்போதைய நிலைமை என்ன என்று கூற முடியுமா?

    பெரும் செலவில் நடத்தப்படும் மோடியின் பொதுக் கூட்டங்களுக்கு நிதி அளிப்பவர் யார் எனச் சொல்வார்களா? இந்த விஷயத்தில் அத்வானியும், மோடியும் பதில் கூறாமல் ஏன் மெüனம் காக்கின்றனர்?

    இலவசமாக யாரும் உணவு அளிக்க மாட்டார்கள். (இப்படி) பணத்தை வாரி இறைத்தவர்கள் அதற்கான பலனை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். அவர்களது கட்சி பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக நடத்தப்படுகிறது.

    கருப்புப்பணம் குறித்து காங்கிரஸ் மீது குற்றம்சாட்டும் பாஜகவினரிடம்தான் அத்தகைய பணம் இருக்கிறது. கணக்கில் வராத கருப்புப் பணத்தை பிரசாரத்துக்காக செலவிடுவதால் இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெற சாத்தியமில்லை.

    இது பற்றி அமலாக்கப் பிரிவினரும் மத்தியப் புலனாய்வுத் துறையினரும்தான் விசாரிக்க வேண்டும் என்றார் கபில் சிபல்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai