Enable Javscript for better performance
மத்திய அரசு பெண் ஊழியரிடம் வழப்பறி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு பெண் ஊழியரைத் தாக்கி பணப் பையை பறித்துச் சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து தில்லி போலீஸார் புதன்கிழமை கூறியதாவது: மத்திய நிலக்கரி அமைச்சகத்தில் பணியாற்றி வருபவர் ரீதா பன்சால் (57). இவர் தில்லி ரோஹிணி செக்டார் 2-இல் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் காலையில் அலுவலகம் சென்றார். பின்னர் பணியை முடித்துவிட்டு மாலையில் வழக்கம்போல் ரோஹிணியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், பன்சாலின் கைப் பையை பறிக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை கீழே தள்ளி இருவரும் சராமரியாக உதைத்தனர்.  பின்னர், அவரது பையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதில் பன்சாலின் வலது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப் பையில் ரூ.3 ஆயிரம் பணம் இருந்ததாக பன்சால் தெரிவித்தார். மர்ம நபர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai