Enable Javscript for better performance
\\\"மன்னிப்பு கோராமல் நழுவுகிறார் மோடி\\\'- Dinamani

சுடச்சுட

    

    "குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்காமல் நரேந்திர மோடி நழுவுகிறார்' என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    குஜராத் கலவரம் தொடர்பாக தன்னை மன்னிப்பு கோர வலியுறுத்துவதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி தனது பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி அண்மையில் பேசிய கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், நரேந்திர மோடி குறித்து முக்கியத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், "நரேந்திர மோடி குறுகிய மனம் படைத்தவர். அவருக்கு (குஜராத் கலவரம் குறித்து) மன்னிப்பு கேட்கும் மனோபாவம் கிடையாது. அப்படியே கேட்டாலும் மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்' என்றார்.

    இதையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மீம் அஃப்ஸல் கூறுகையில், "கடந்த 1984-இல் நடைபெற்ற (சீக்கியர்களுக்கு எதிரான) கலவரத்துக்காக பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் மன்னிப்பு கோரினர். ஆனால் குஜராத் கலவரத்துக்காக அந்த மாநில முதல்வர் மோடி இதுவரை மன்னிப்பு கேட்காமல் நழுவுகிறார். அவர் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்.

    ஏனென்றால் சர்வாதிகாரிகள் தங்கள் செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதில்லை.  நரேந்திர மோடியும் இதையே நாட்டு மக்களுக்கு உணர்த்த விரும்புவதால் மன்னிப்பு கோர

    மாட்டார்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai