Enable Javscript for better performance
மோதலுக்கு இடமில்லை:மேனகா காந்தி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    "மக்களவைத் தேர்தலை எவ்வாறு காங்கிரஸ் எதிர் கொள்கிறதோ, அதைப் போலவே எனது மகன் வருண் காந்தியும் சந்திக்கிறார். இதில் மோதல் என்ற பேச்சுக்கு இடமில்லை' என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி கூறியுள்ளார்.

    "மக்களவைத் தேர்தல் என்பது கருத்தியல் யுத்தமாகும்; குடும்பத்தினரின் தேநீர் விருந்தல்ல' என்று தனது சித்தப்பா மகன் வருண் காந்தியை விமர்சித்து சோனியா காந்தியின் மகள் பிரியங்கா கூறிய கருத்தால், தனிப்பட்ட முறையில் இரு குடும்பத்தாரின் உறவில் உரசல் ஏற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

    இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தில்லியில் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் புதன்கிழமை விளக்கம் அளித்தார்.  அப்போது அவர் பேசுகையில், "வருண் காந்தி மீது அவர் (பிரியங்கா) ஏன் திடீரென ஆத்திரப்பட்டு விமர்சித்தார் என்பதற்கான காரணம் புரியவில்லை.

    இந்தத் தேர்தலை அவர்கள் (காங்கிரஸார்) எப்படி எதிர் கொள்கிறார்களோ, அதே சூழ்நிலையில்தான் எனது மகன் வருண் காந்தியும் எதிர் கொள்கிறார். இதில் கருத்தியல் யுத்தத்துக்கு இடமில்லை. எனது கணவர் (சஞ்சய் காந்தி) வெற்றி பெற்ற தொகுதியில் வருண் காந்தி போட்டியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai