Enable Javscript for better performance
ரோஹிணியில் பஞ்சாங்கம் ணவாசிப்பு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ரோஹிணியில் பஞ்சாங்கம் ணவாசிப்பு நிகழ்ச்சி

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புது வருடப் பிறப்பையொட்டி, பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி  வடமேற்கு தில்லி கலாசார கூட்டமைப்பு சார்பில் ரோஹிணியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

    ரோஹிணி, செக்டர்-2-இல் உள்ள காளி கோயிலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சுவாமிநாத சாஸ்திரிகள் அனைத்து மக்கள் நலனுக்காக பூஜை செய்தார். பின்னர் புதுவருடத்தின்  பலன்களை எடுத்து கூறினார். அவரைத் தொடர்ந்து,  ரங்கநாத சாஸ்திரிகள் பஞ்சாங்கம் படிப்பதன் பலன்கள் மற்றும் புதுவருடத்தில் ராசிகள், கிரகங்கள் மாறுதல்கள் மற்றும் அதன் பலா பலன்களை விளக்கினார். இந் நிகழ்ச்சியில் ரோஹிணி வாழ் தமிழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந் நிகழ்ச்சியின் முடிவில் வட மேற்கு தில்லி கலாசார கூட்டமைப்பின் தலைவர் ஆர். அய்யப்பன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai