Enable Javscript for better performance
வடிகால் தூர்வாரும் பணியை மே15-க்குள் முடிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    வடிகால் தூர்வாரும் பணியை மே15-க்குள் முடிக்க வேண்டும்

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பருவமழையைச் சமாளிக்கும் வகையில், வடிகால் தூர்வார்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மே 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் புதன்கிழமை உத்தரவிட்டார்.

    தில்லியில் மழைக்கால முன் தயாரிப்புகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம் நஜீப் ஜங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக் கூட்டத்தின் போது துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அதிகாரிகளுக்கு அளித்த உத்தரவு: மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும். அப்போதுதான், அனைத்து நிகழ்வுகளையும் சமாளிக்க அரசு தயாராக இருக்க முடியும். 

    ஆகவே, இதற்கான பணிகளை பொதுப் பணித் துறையினரும், மாநகராட்சிகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    மே மாதம் பிற்பகுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான மழைக் காலத்தை தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து,  மதிப்பீடு செய்ய வேண்டும். பொதுப் பணித் துறை மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டும்.

    மழைக்காலத்தின் போது ஏற்படும் வெள்ளம், மழை நீர் தேங்குதல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையிலும், புகார்களுக்குத் தீர்வு காணும் வகையிலும் துறைகள் இடையே மென்மையான ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அதேபோன்று மாநகராட்சிகள், பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனம், வெள்ளக்கட்டுப்பாட்டு துறை ஆகியவை இடையே ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும்.  

    மேலும், தங்களுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வரும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை பல்வேறு அரசுத் துறைகள் மூலம் ஏற்படுத்தப்படும் அனைத்துக் கட்டுப்பாட்டு அறைகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று நஜீப் ஜங் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai