Enable Javscript for better performance
ஹோட்டல் முதலாளி கொலை: மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹோட்டலில் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகைக்குப் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் அதன் முதலாளியை தாக்கிக் கொன்ற வழக்கில், மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

    புது தில்லியைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகளான ரஷீத் (26), முகம்மது அக்ரம் (21), சாஹீப் (19) ஆகிய மூவரும் திங்கள்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் சாப்பிடச் சென்றனர். இறுதியில் சாப்பிட்டதற்கான பில் தொகை அதிகமாக வந்துள்ளது. 

    ஹோட்டல் உரிமையாளரான யூசுஃப்பிடம்  தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்ய  யூசுஃப்பின் சகோதரர் நவாப் முயன்றார்.

    அப்போது கடையில் இருந்த இரும்புத் தடியால் அவரை மூவரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நவாப் மயங்கி விழுந்தார்.

    அருகே நின்றிருந்த யூசுஃப்பை, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக்  கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே யூசுஃப் உயிரிழந்தார்.

    இதையடுத்து, அங்கிருந்த அந்த மூவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த நவாப்பை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் கொலையை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, ரஷீத், முகம்மது அக்ரம், சாஹீப் ஆகிய மூவரும் தங்கியிருந்த வீட்டைக் கண்டறிந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai