Enable Javscript for better performance
ஆம்ஆத்மிக்கு நன்கொடை 2 நாள்களில் ரூ. 1.15 கோடி- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி கட்சிக்கு இரண்டு நாள்களில் ரூ. 1.15 கோடி நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் களம் இறங்கியுள்ள அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக நன்கொடை அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து, புதன்கிழமை ரூ.80 லட்சமும், வியாழக்கிழமை ரூ. 35 லட்சமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த நன்கொடை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாகவும் கூறினார்.

    சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஓமான், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள கட்சியின் ஆதரவாளர்கள் நன்கொடைகளை அனுப்பியுள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து கட்சி ஆதரவாளர் ஒருவர் ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை குறைந்தபட்சமாக ரூ. 10 வந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai