Enable Javscript for better performance
இன்று கிராமிய நடன விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிராமிய நடனம், இசை விழா "ஸ்வர் ராஜ்யா' தில்லியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்குகிறது.

    இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர் சுமித் கெயின் வியாழக்கிழமை கூறியது:

    தில்லி ஸிரி ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் இரு நாள்கள் நடைபெறும் இக் கிராமிய நடன விழாவில் பல்வேறு மாநிலங்களின பாரம்பரிய நடனம், பாடல்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக ஒடிஸா மாநிலத்தின் "செரய்கேலா சாவ்' ராஜஸ்தான் மாநிலத்தின் "கல்பெலியா', "சாரி', ஆந்திர பிரதேசத்தின் "கொண்டு', "குஸடி', கர்நாடகத்தின் "தோலு குனித்தா', குஜராத்தின் "கர்பா', "ராஸ்', நாகாலாந்து மாநிலத்தின் "லீ' உள்ளிட்ட கிராமிய நடனங்கள் இடம்பெறவுள்ளன.

    இத்துடன் சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் வழங்கும் லோக் நிருத்யா குழுவினரின் "கேதி' நடனம், கபீரின் கவிதைகளுக்கு ராக் இசை, கர்நாடக இசை ஆகியவையும் இடம்பெறும். மாலையில் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு கிராமிய நடனங்களை தில்லிவாசிகள் கண்டு களிக்க முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai