Enable Javscript for better performance
இறுதிக்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    இறுதிக்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்டமாக 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

    இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும், பிகாரில் உள்ள 6 தொகுதிகளுக்கும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சில தொகுதிகளில் உள்ள மாவட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் மேற்கொண்டது. இறுதிக்கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இம்மாதம் 24ஆம் தேதியும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்கு 25ஆம் தேதியும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக 28ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai