Enable Javscript for better performance
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்:சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்:சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும்

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் (போக்úஸா) சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நிதிமன்றங்களில் பாலியல் வழக்குகளில் வாதாடும் வகையில் சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நான்கு வாரங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக வழக்குரைஞர் கௌரவ் குமார் பன்சால் தாக்கல் செய்த பொது நல மனுவை புதன்கிழமை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி சித்தார்த் மிருதுள் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

    மனுவில் கூறப்பட்டுள்ளப்வது: "குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் (போக்úஸா) சட்டத்தின் பிரிவு 28-இன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று, இச் சட்டப் பிரிவு 32-இன்படி இதற்கான சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தில்லி பிரதேசத்தில் இச் சட்டத்தின் பிரிவுகள் உரிய வகையில் அமல்படுத்தப்படவில்லை. சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்படவில்லை. சிறப்பு அரசு வழக்குரைஞர்களும் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால், "போக்úஸா' சட்டம் 2012, நவம்பர் 14-ஆம் தேதியே நடைமுறைக்கு வந்துவிட்டது. நாட்டில் 18 வயதுக்குள்பட்ட சுமார் 15 கோடி சிறுமிகளும், 7.30 கோடி சிறுவர்களும் பாலியல் உறவுக்கும் அல்லது பிற பாலியல் வன்முறைக்கும் ஆளாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இச் சூழலில் இதுபோன்ற சிறப்பு நீதிமன்றங்களும் சிறப்பு

    அரசு வழக்குரைஞர்களும் அவசியமாகிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai