Enable Javscript for better performance
சுப்பிரமணியன் சுவாமி வீடு முன் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுப்பிரமணியன் சுவாமி வீடு முன் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி நிஜாமுதீனில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வீடு முன் மகளிர் காங்கிரஸார் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பிரியங்கா காந்தி குறித்து கண்ணியக்குறைவாக சுப்பிரமணியன் சுவாமி பேசியதாக கூறி, அதை அவர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கிழக்கு தில்லி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் மகளிர் காங்கிரஸ் உறுப்பினருமான வர்யம் கெüர் தலைமையில் சுப்பிரமணியன் சுவாமியின் வீடு முன் மகளிர் காங்கிரஸார் வியாழக்கிழமை காலை திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது மாநகராட்சி கவுன்சிலர் சவிதா சர்மா பேசுகையில், "பிரியங்கா மீது கண்ணியக் குறைவாக சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார். இது பெண்களுக்கு அவர் மதிப்பு அளிக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. இவ்வாறு கண்ணியக் குறைவாகப் பேசியதை அவர் வாபஸ் பெற வேண்டும்.

    இந்த விஷயத்தில் அவர் மன்னிப்புக் கோரவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.

    பின்னர் அவர்கள் மதுரா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால், போலீஸார் தலையிட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

    அப்போது தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவர் ஓனிகா மெஹ்ரோத்ரா கூறுகையில், சுப்பிரமணியின் சுவாமியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அவர் மன்னிப்புக் கோர வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai