Enable Javscript for better performance
தில்லியில் திட்டப் பணிகள் தொடர தேர்தல் ஆணையம் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் திட்டப் பணிகள் தொடர தேர்தல் ஆணையம் அனுமதி

    By புது தில்லி  |   Published on : 18th April 2014 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள தில்லி, ஹரியாணா, சண்டீகர் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த திட்டப் பணிகளைத் தொடர்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட் டிருந்ததன் காரணமாக தில்லியில் பல்வேறு கட்டுமானத் திட்டங்களையும் திட்டப் பணிகளையும் செயல்படுத்துவதை தில்லி பிரதேச அரசு நிறுத்திவைத்திருந்தது.

    புறநகர் ஆரச்சாலைத் திட்டம், விகாஸ்புரி முதல் வஸீராபாத் வரையிலான சமிக்ஞை இல்லாத திட்டப் பணி, டிடிசி பஸ்கள் கொள்முதல், சாலைகளின் விரிவாக்கம், தீனதயாள் உபாத்யாய மார்கில் நடைபெற்று வந்த புதிய நீதிமன்ற வளாகத்திற்கான கட்டுமானப் பணி உள்பட பல்வேறு முக்கியத் திட்டப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டியலில் அடங்கும்.

    இந் நிலையில், இத் திட்டப் பணிகளைத் தொடர்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அண்மையில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    "தில்லி யூனியன் பிரதேசம், ஹரியாணா மற்றும் சண்டீகரில் தேர்தல்கள் முடிவுற்றுள்ளன.

    இந்த மாநிலங்களில் மறுதேர்தல் ஏதும் நிலுவை இருந்தால் அந்த மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் திட்டப் பணிகளை அமல்படுத்தவும் மறு ஆய்வு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

    தேர்தல் பணிகளில் ஈடுபடாத அலுவலர்கள் மட்டும் இப் பணிகளை மறுஆய்வு செய்யலாம். மாநிலத்திற்கும் நாட்டுக்கு வெளியேயும் இந்த மாநிலங்களின் அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai