Enable Javscript for better performance
தில்லியில் 14,000 தபால் வாக்குகள் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 14 ஆயிரம் தபால் வாக்குகள் இது வரை பதிவாகியுள்ளன என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து தில்லி தேர்தல் அலுவலக மூத்த அதிகாரி கூறுகையில், "தில்லி மக்களவைத் தேர்தல் பணியில் தில்லி காவல் துறை, அரசுத் துறை பணியாளர்கள் என சுமார் 75 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் தபால் வாக்கு அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து, 30 ஆயிரம் தபால் வாக்கு சீட்டுகளும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட தில்லி போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு 45 ஆயிரம் தேர்தல் பணிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதில், இது வரை 14,387 தபால் வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மே 16-ஆம் தேதி வரை தபால் வாக்குகள் செலுத்த கால அவகாசம் உள்ளது. எனவே, தபால் வாக்கு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

    2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 532 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாயின. ஆனால், அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை 45,144 ஆக அதிகரித்தது.

    தபால் வாக்கு: மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அலுவலகங்கள், துணைநிலை ஆளுநர் மாளிகை ஆகியவற்றில் பணியாற்றும் போலீஸார், பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்டோர் சிறப்பு வாக்காளர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கும் தபால் வாக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai