Enable Javscript for better performance
புதிய இணையதளம் தொடங்கியது தேர்தல் ஆணையம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்களிப்பதை ஊக்குவிக்கவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "வோட்டர் எஜுகேஷன் சேனல்' என்ற புதிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்காளர்கள் உபயோகிக்கும் முறை மற்றும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதை பதிவு செய்யும் வகையில் "நோட்டா' பொத்தான் குறித்த விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளமான

    ஜ்ஜ்ஜ்.ங்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைதளத்துடன் இந்த புதிய இணையதளம் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தில் மக்கள் வாக்களிப்பதை வலியுறுத்தும் பல்வேறு சினிமா பிரபலங்களின் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளமான "யுடியூபில்' தேர்தல் தொடர்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விடியோக்களை காணும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தில் முதல் விடியோவாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், வாக்களிக்கும் உரிமையை வலியுறுத்தி பேசும் விடியோ இடம் பெற்றுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விடியோ, நட்சத்திர விளையாட்டு வீரர்களான எம்.எஸ்.தோனி, சாய்னா நெவால் மற்றும் எம்.சி.மேரிகோம் ஆகியோரின் விடியோக்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai