Enable Javscript for better performance
\\\"பேட்டரி ரிக்ஷா\\\' தொடர்ந்து இயங்க வேண்டும்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    "பேட்டரி ரிக்ஷா' தொடர்ந்து இயங்க வேண்டும்: பாஜக

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் "பேட்டரி ரிக்ஷா'க்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

    தில்லியில் "பேட்டரி ரிக்ஷா'க்கள் கடந்த இரு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். "பேட்டரி ரிக்ஷா'க்களால் சுற்றுச் சூழல் மாசு அடைவதில்லை. இவற்றுக்குப் பதிவு எண் இல்லை என்றும் அவற்றுக்கு மதிப்புக்கூட்டு வரியான "வாட்' வரி வசூலிப்பதில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

    250 வாட் மின்திறன் கொண்ட மோட்டார்களை கொண்டுள்ள வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, காப்பீடு அளிக்கப்படுகிறது. ஆனால், "பேட்டரி ரிக்ஷா'க்களில் உள்ள மோட்டார்கள் 300 முதல் 650 வாட் மின்திறன் கொண்டவை. அப்படி இருந்தும் அவற்றுக்கு காப்பீடு அளிக்கப்படுவதில்லை. தில்லியில் "பேட்டரி ரிக்ஷா'க்கள் இயங்க தொடங்கிய பிறகுதான் பொதுப் போக்குவரத்து மேம்பட்டுள்ளது.

    இந் நிலையில், "பேட்டரி ரிக்ஷா'க்களைத் தடை செய்ய அரசு நிர்வாகத்தில் உள்ள சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தில்லி போக்குவரத்து காவல் துறையும் பேட்டரி ரிக்ஷாக்கள் இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. "பேட்டரி ரிக்ஷா'க்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டால், அவற்றை நம்பி வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே, வேலைவாய்ப்பு, மனிதாபிமான அடிப்படையில் தில்லியில் "பேட்டரி ரிக்ஷா'க்கள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கிராமீண் சேவா: இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி "கிராமீண் சேவா' பஸ்கள், ஆட்டோக்கள் மாநகரங்களுக்குள் இயக்கப்படுவதில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு ஏப்ரல் 15-ஆம் தேதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai