Enable Javscript for better performance
மின் ஒழுங்குமுறை கட்டணத்தை நீக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய தலைநகர் வலயம், நொய்டாவில் அமலில் உள்ள மின் ஒழுங்குமுறை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அப் பகுதி குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அண்மையில் நொய்டாவில் நடைபெற்ற தேசிய தலைநகர் வலய குடியிருப்போர் நல சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டத்தில் இக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது குறித்து சம்மேளனத்தின் நிர்வாகி பி.எஸ். ஜெயின் கூறியது: மின் நுகர்வோர்களிடம் 2013 ஜனவரி முதல் மின் ஒழுங்குமுறைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. இக் கட்டணம் உத்தர பிரேத மாநிலத்தில் மட்டுமே அமலில் இருந்து வருகிறது. இது தேசிய தலைநகர் வலயப் பகு

    திக்கு பொருந்தாது.

    மின்சாரச் சட்டம் 2000-இன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அச் சட்டத்தில் மின் ஒழுங்குமுறைக் கட்டணம் வசூலிப்பது பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

    நொய்டாவில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இதன்படி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு குறைந்த அளவு மின் கட்டணம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின் கட்டணம் தவிர மற்ற அதிகப்படியான கட்டணங்கள் எதையும் வசூலிக்கக் கூடாது.

    மின் நுகர்வோர் தங்களது இருப்பிடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு, அவர்கள் பயன்படுத்தும் மின் அளவீட்டுக்கும் மேல் மின் விநியோக நிறுவனங்கள் நிரந்தரமாக ஒரு கட்டணத்தை வசூல் செய்கிறது. இக் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

    மின் பயன்பாட்டைக் கணக்கிடும்போதே, கூடுதல் கட்டணம் எதுவாக இருந்தாலும் மின் கட்டணத்துடனேயே அதைச் சேர்க்க வேண்டும். எந்த வகையிலும் தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

    மேலும், மின்சார விநியோக நிறுவனங்கள் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் மின் இணைப்பு வழங்கும்போதும், வேறு பல பணிகளின்போது மின் நுகர்வோர்களிடம் தனியாகப் பணம் வசூலிக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாதது.

    எனவே, மின் விநியோக நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர் முறையை ரத்து செய்ய வேண்டும். அப் பணிகளுக்கு நிரந்தரப் பணித் திட்டத்தின் கீழ் போதிய சம்பளத்துடன் தகுதி வாய்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் லஞ்சம் பெறுவது தடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai