Enable Javscript for better performance
முதியோர்களை கைவிடும் குடும்பத்தினர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    முதியோர்களை கைவிடும் குடும்பத்தினர் மீது வழக்கு

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் முதியோர்களை சரியாக பராமரிக்காமல் கைவிட்ட பிள்ளைகள் அல்லது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முடிவு செய்துள்ளது.

    இது குறித்து தில்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியது: பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட ஆண் அல்லது பெண் முதியவர்கள் சாலையில் திரிவது கண்டறியப்பட்டால் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி தலைநகர் தில்லியில் கைவிடப்பட்ட முதியோர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும்படி காவல் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பிள்ளைகள், குடும்பத்தாரால் கைவிடப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முதியவர்களிடம் விசாரித்து முகவரி கண்டறியப்படும். அவ்வாறு முகவரியைச் சொல்லாதவர்களை காணாமல் போனவராக வழக்குப் பதிவு செய்யப்படும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி இந்த வழக்குப் பதிவு செய்யப்படும்.

    அவர்கள் முழுமையாக கைவிடப்பட்டதாக கண்டறியப்பட்டால் அதற்கு அவர்களது குடும்பத்தினர்தான் பொறுப்பேற்க வேண்டும். அச் சட்டத்தின்படி பிள்ளைகள் அல்லது குடும்பத்தார் தண்டனைக்குரியவர்களாவர். மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். அச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பராமரிப்புத் தீர்ப்பாயம் உள்ளிட்ட மற்ற ஆணையகங்களுக்கும் விசாரணை அதிகாரி தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் அளிக்க குடும்பத்தினருக்கு உத்தரவிடப்படும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai