Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ரியல் எஸ்டேட் அதிபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் உயரதிகாரி வியாழக்கிழமை கூறியது: தில்லி குரேஜி பகுதியைச் சேர்ந்தவர் நவாப் (44). ரியல் எஸ்டேட் அதிபர். ஃபைனான்சியராகவும் இருந்து வந்தார். இந் நிலையில், கிழக்கு தில்லி, கீதா காலனி, ஆரம் பூங்கா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்துக்கு அருகில் புதன்கிழமை காலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு அருகே வந்ததும் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது நவாப் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக போலீஸýக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு சுவாமி தயானந்த் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். பணம் அல்லது நிலத் தகராறு தொடர்பாக முன்விரோதத்தில் இக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கீதா காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைச் சுட்டவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் தொûலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரித்து வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai