Enable Javscript for better performance
 சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த பெண் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

     சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த பெண் மீட்பு

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி, ஐஐடி கேட் அருகே வியாழக்கிழமை சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்த 19 வயது பெண்ணை போலீஸார்மீட்டனர்.

    அப் பகுதியில் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் உடனடியாகச் சென்று அப் பெண்ணை மீட்டனர். அவரது ஆடைகள் கிழிந்து இருந்தன. உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. அவரை போலீஸார் எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவரது நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் உள்ளது. அவர் குஜராத் மாநிலத்தில் இருந்து ஒருவருடன் தில்லிக்கு வந்ததாகத் தெரிவித்தார்.

     ஆனால், எப்படி சாலையோரத்தில் விழுந்து கிடந்தார் என்பதை விவரிக்க முடியவில்லை. அவரது குடும்பம் குஜராத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறிய முகவரியில் தொடர்பு கொண்டபோது, அங்கிருந்தவர்கள் அப் பெண்ணை தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ளூர் போலீஸாரின் உதவியை தில்லி போலீஸார் நாடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடத்தல், தாக்கிக் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வசந்த் விஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     அவர் உடல்நிலை முழுமையாகத் தேறிய பிறகுதான் அவரிடம் சம்பவம் குறித்த தகவல்களைப் பெற முடியும். இருப்பினும் அவர் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள கடைக்கார்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai