Enable Javscript for better performance
அனுமதி பெறாத 50  கட்டடங்கள் இடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாத  50 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் 300 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

     இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் யோகேந்திர சிங் மான் வெள்ளிக்கிழமை கூறியது:

    தில்லியில் பருவமழை தொடங்கும் முன்னர் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மாநகராட்சிப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால்,  கணக்கெடுக்கப்புப் பணி, அனுமதி பெறாத கட்டடங்கள் மீதான நடவடிக்கைகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

     ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் 300 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பதில் அளிக்காத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் யோகேந்திர சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai