Enable Javscript for better performance
இணையதள குற்றங்களை கையாள போலீஸாருக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    இணையதள குற்றங்களை கையாள போலீஸாருக்கு பயிற்சி

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிகரித்துவரும் இணையதள குற்றங்களை கையாளும் வகையில் தில்லி காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 65 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இப் பயிற்சியில் கூடுதல் துணை ஆணையர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரையிலான 65 அதிகாரிகள் பங்கேற்றதாக தில்லி காவல் துறையின் கூடுதல் ஆணையர் வி.வி. சௌத்ரி தெரிவித்தார்.

     அவர் கூறுகையில், "தற்போது இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதைத் திறம்படக் கையாளவும் குற்ற நடவடிக்கைகளை கண்டறியவும் காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது. இப் பயிற்சி முகாமை எச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா ஸ்பெஷல் சர்வீசஸ் குரூப் நிறுவனம் ஆகியவை இணைந்து  நடத்தின' என்றார் அவர்.

     இப் பயிற்சியின்போது இணையதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் பல்வேறு திருட்டுகள், மோசடிகள் தொடர்பான விஷயங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.

     "பல்வேறு வங்கிகளில் உள்ள பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக விழிப்புணர்வை காவல் துறை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இப் பயிற்சியை எச்டிஎஃப்சி வங்கி நடத்திவருகிறது' என்று அந்த வங்கியின் மூத்த துணைத் தலைவர் விஜய் காமத் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai