ஓட்டுநரைத் தாக்கி கார் திருட்டு: போலீஸ் தீவிர விசாரணை
By புது தில்லி, | Published on : 19th April 2014 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லியில் ஓட்டுநரைத் தாக்கி காரை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்கு தில்லி, வசந்த் குஞ்ஜ் பகுதியில் கணக்காளர் ஒருவர் தன் காரில் அங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றுக்குச் சென்றார். ஓட்டுநர் காரிலேயே இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள், கார் கண்ணாடியை தட்டினர். இதையடுத்து, கதவைத் திறந்தததும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஓட்டுநரை இறங்குமாறு தெரிவித்தனர். அதற்கு மறுப்புத் தெரிவித்ததும் அவரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை திருடி சென்றனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்யப்பட்டு காரை திருடிச் சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள விடியோ காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.