Enable Javscript for better performance
கார் திருடும் கும்பலில் மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார்களை திருடும் கும்பலைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி காவல் கூடுதல் ஆணையர் ரவீந்திர யாதவ் (குற்றப்பிரிவு) செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

    தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், கன்டோன்மென்ட், நரைனா, குர்கான் உள்ளிட்ட பல பகுதிகளில் கார்கள் திருடு போவதாக கடந்த இரண்டு மாதங்களாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அக் கும்பலைப் பிடிக்க துணை ஆணையர் பீஷம் சிங் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா மேற்பார்வையில்  ஆய்வாளர் குல்தீப் சிங் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

    இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை தில்லி கன்டோன்மென்ட் பகுதிக்கு அக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக அங்கு சென்ற தனிப் படையினர், தில்லி கண்டோன்மென்ட்- துவாரகா இடையே உள்ள ஐஓசி சிக்னலில் நின்றிருந்த காரில் இருந்த இருவர் பிடிபட்டனர்.

    அவர்கள் சாஹர்பூரைச் சேர்ந்த பினு குமார் (எ) வினய் (28), பாலம் பகுதியைச் சேர்ந்த அல்தாஃப் (23) என்பதும் அவர்கள் மீது ஏற்கெனவே கார் திருட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், குர்கான் டிஎல்எஃப் பகுதி-3 இல் காரை கடத்தி வந்ததாகவும், குறிப்பாக, ஓட்டுநர் மட்டும் காரில் இருக்கும் சமயங்களில் கார்களை திருடி வந்ததையும் ஒப்புக் கொண்டனர். இதற்கு ஆமீர் என்பவர் உதவி செய்ததாகவும் விசாரணையின்போது அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, வினய் அளித்த தகவலின் அடிப்படையில் ஆமீரும் கைது செய்யப்பட்டார்.  அவர்களிடம் இருந்து கார் ஒன்று மீட்கப்பட்டது. மேலும், கடத்தப்பட்ட மற்ற கார்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்ட மூவரும் குர்கான் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார் ரவீந்திர யாதவ்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai