Enable Javscript for better performance
கார் விற்பனையக மேலாளரை  தாக்கியதாக நீதிபதியின் மகன் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கார் விற்பனையக மேலாளரை  தாக்கியதாக நீதிபதியின் மகன் மீது வழக்கு

    By புது தில்லி  |   Published on : 19th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் கார் விற்பனையக மேலாளரை தாக்கியதாக நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியின் மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     தெற்கு தில்லி, பாதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அத்னான் அகமது. நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியின் மகனான அவர், அப் பகுதியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் விற்பனையகத்துக்கு கார் வாங்குவதற்காக நண்பர்களுடன் திங்கள்கிழமை சென்றார். அங்கு முன்னுரிமை அளித்து காரை அவருக்கு தரும்படி ஊழியர்களிடம் கேட்டாராம். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேலாளர் அமித் சர்மாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அமித் சர்மா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     "அத்னான் அகமது ஏற்கெனவே ஒரு முறை விற்பனையகத்துக்கு வந்துள்ளார். கார் டெலிவரி விஷயமாகப் பேசினார். அப்போது முன்கூட்டியே டெலிவரி அளிக்கும்படி கார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தோம். ஆனால், அவ்வாறு முன்னுரிமை அளிக்க முடியாது என்று அங்கிருந்து பதில் வந்தது. இந் நிலையில், அவரும் அவரது நண்பர் ராகுல் சேத் ஆகிய இருவரும் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து முன்னுரிமை கொடுத்து காரை டெலிவரி செய்யும்படி கோரினார். அதற்கு கார் நிறுவனத்தின் நிலைப்பாடு எடுத்துக் கூறப்பட்டது. அப்போது அவர் பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்துவந்து அமித் சர்மா மற்றும் சில ஊழியர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் அந்த விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது' என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai