Enable Javscript for better performance
கோடைக்கு தயாரானது தில்லி:அமோக விற்பனையில் பழங்கள்!எம். வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

    

    கோடைக்கு தயாரானது தில்லி:அமோக விற்பனையில் பழங்கள்!எம். வெங்கடேசன்

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மற்றும்  தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பழங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    பருவ காலத்துக்கேற்ப பழங்களை இயற்கை அளித்துவருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் தாகம் தீர்க்கவும் கோடையில் வரும் நோய்கள், பலவீனம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும் பழங்கள் பயன்படுகின்றன.

    இப்போது தில்லி ஆசாத்பூர் மண்டிக்கு அண்டை, வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும், தில்லியிலுள்ள நரேலா, நஜஃப்கர், கேசவ்பூர், மெஹ்ரெüலி, ஓக்லா, திக்ரி கலான், பாக் திவார் உள்ளிட்ட மண்டிகளுக்கும்  பழங்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

     பழங்களுடன், கோடையைத் தணிக்க உதவும் பீன்ஸ், முள்ளங்கி, கேரட் ஆகிய காய்கறிகளின் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

     தில்லியில் 76 ஏக்கரில் அமைந்துள்ள பிரமாண்டமான ஆசாத்பூர் காய்கறி, பழ மண்டிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளரிக்காய் 370.8 டன்,  திராட்சை 217.8 டன், கர்பூஜா 326.7 டன், மாம்பழம் (சஃபேதா) 737.7 டன் குவிண்டல், மோசாம்பி 1470.1 டன், பப்பாளி 232.8 குவிண்டல், அன்னாசி 82.4 டன், மாதுளை 121.1 டன்.  தர்பூசணி 726.7 குவிண்டல், சப்போட்டா 703.8 டன் வந்தன. 

     தில்லியில் முக்கிய மார்க்கெட்டிகளில் ஒன்றான, காஜிபூர் மண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வணிகர்கள் கோடை கால பழ விற்பனை குறித்து தெரிவித்தது:

    இம்ரான்: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் திராட்சை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, மாம்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்கள் மார்க்கெட்டுக்கு அதிகம் வரத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலையில் திராட்சை, ஆரஞ்சு விற்பனை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் மாம்பழ விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து வரும் மாம்பழங்கள், கேரளத்தின் வாழைப்பழம், காஷ்மீரின் திராட்சை ஆகியவற்றுக்கு அமோக வரவேற்பு உள்ளது.

    முகமது இக்ரம்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலங்கள், தென் மாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து பழங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.  உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ள தர்ப்பூசணி, நாக்பூரின் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களுக்கு அதிக தேவைப்பாடு நிலவுகிறது. பெரும்பாலும், கோடைக்கு ஏற்ற, தாகம் தீர்க்கும் பழங்களையே மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். பழரசக் கடைகள் உரிமையாளர்கள் பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

    சந்த்: மார்க்கெட்டில் தர்ப்பூசணி, மாம்பழம் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அவற்றின் விற்பனையும் சூடுபிடித்து வருகிறது. வரும் நாள்களில் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஆரஞ்சு கிலோ ரூ.70 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நசீம்: கோடை காலத்தில் பாகிஸ்தான் - பஞ்சாப் எல்லையில் விளையும் கர்பூஜா பழங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இப்பழம் கிலோ ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 

    ஷேஸாத் குரேஷி: தேவை அதிகரித்து வருவதால், மாதுளை பழத்தின் விலை எப்போதுமே அதிகமாகத்தான் உள்ளது. ஆண்டு முழுவதும் கிடைத்து வரும் இப் பழத்தை  அனைத்து வயதினரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மாம்பழம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை அதன் தரம், அளவைப் பொருத்து ரூ. 40, ரூ. 70, ரூ. 120 என்ற வகையில் விற்கப்படுகிறது.

    முகமது ஷாஹி: கோடை காலத்தில் தாகம் தணிக்கும், பழ ரசம் தயாரிக்க உதவும் பாப்பாளி பழத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளன. தற்போது கிலோ ரூ. 15-க்கு விற்கப்படுகிறது. கோடை காலத்தைத் தவிர்த்து மற்ற காலங்களில் ரூ. 30 வரை விற்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai