Enable Javscript for better performance
சாலை விபத்தில் ஜேஎன்யு மாணவர்கள் மூவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் ஜேஎன்யு மாணவர்கள் மூவர் சாவு

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் மூவர், சாலை விபத்தில் இறந்தனர். பல்கலை. வளாகப் பகுதியில் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்தது.

    பிகார் மாநிலம், கயையைச் சேர்ந்தவர்கள் ரவி சிங் செüத்ரி, ரவி சங்கர் குப்தா. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ். அனைவரும் 20 வயதுக்குள்பட்டவர்கள். மூவரும் தில்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொரிய மொழி பாடத்தில் எம்.ஏ. படித்து வந்தனர்.

    இந் நிலையில், பல்கலை. வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஒருவர் எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இருவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்

    பட்டனர்.

     இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் இருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தில்லி வசந்த் குஞ்ஜ் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai