Enable Javscript for better performance
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்கள்- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்கள்

    By புது தில்லி  |   Published on : 19th April 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் காப்பாற்றினர்.

     தில்லி சரிதா விஹார் மெட்ரோ ரயில் நிலைய வளாகப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது, மெட்ரோ ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தில் இளம் ஜோடிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்த டி.வி. வழியாக சிஐஎஸ்எஃப் வீரர்கள் பார்த்தனர். சிறிது நேரத்தில் ஆண் நண்பர் அங்கிருந்து சென்றுவிட அப் பெண் மட்டும் மனவிரக்தியில் நின்று கொண்டிருந்தார். பிறகு அப் பாலத்தில் இருந்து சாலையில் குதிக்கும் எண்ணத்துடன் அப் பெண் சென்று கொண்டிருந்ததை போலீஸார் பார்த்தனர். இதையடுத்து, சிசிடிவி அறையில் இருந்து உடனடியாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப் பெண்ணை அங்கிருந்து மீட்டனர். அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு, பிறகு உள்ளூர் காவல் துறைவசம் ஒப்படைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai