Enable Javscript for better performance
திஹார் சிறையில் சட்டவிரோதக் காவல்:பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    திஹார் சிறையில் சட்டவிரோதக் காவல்:பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி திஹார் சிறையில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

     சவூதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஷேக் அப்துல் அஸீஸ் (32) என்பவரை உரிய விசா, பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்கு வந்ததாக ஸ்ரீநகரில் போலீஸார் 2005-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் தேதி கைது செய்தனர். அவர் சவூதியில் இருந்து வங்கதேசத்திற்கும் பின்னர் அங்கிருந்து கொல்கத்தா வழியாக இந்தியாவுக்கும் பிறகு தில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கும் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீஸார் விசாரணையில் அவர் சவூதியை சேர்ந்தவர் அல்ல என்று அந் நாட்டு அரசு தெரிவித்தது.

     இதையடுத்து, அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஷேக் அப்துல் அஸீஸýக்கு ஸ்ரீநகர் நீதிமன்றம் ஓராண்டுச் சிறை தண்டனை விதித்தது. மேலும், சிறை தண்டனை முடிந்து 2 மாதத்திற்குள் அவரது நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

     இந் நிலையில், அவர் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னை சட்டவிரோதமாக திஹார் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் அவர் புகார் தெரிவித்தார்.

     அக் கடிதத்தை வழக்காக ஏற்று நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, "சந்தேகத்திற்கு இடமான சூழலில் பிடிபட்டதால் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஷேக் அப்துல் அஸீûஸ  காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவருடைய பூர்விக தேசத்திற்கு அனுப்பிவைக்க மாநில அரசு விரும்பியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால், மத்திய உரசு இந்த விஷயத்தில் உரிய பதில் அளிக்கவில்லை' என்று ஜம்மு-காஷ்மீர் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

     இந் நிலையில் இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. பாஸின், நஜ்மி வஸீரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

     அப்போது "பாதிக்கப்பட்ட ஷேக் அப்துல் அஸீஸýக்கு மத்திய அரசும் தில்லி, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுகளும் சேர்ந்து இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். மேலும், அப் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அத் தொகையில் இருந்து மாதந்தோறும் ரூ. 10 ஆயிரத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai