Enable Javscript for better performance
தேர்தல் நடத்தை விதி மீறல்: ராக்கி பிர்லா மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதி மீறல்: ராக்கி பிர்லா மீது வழக்கு

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முன்னாள் அமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ராக்கி பிர்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தில்லி தேர்தல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை இரவு கூறியது: "தில்லியில் கடந்த 10-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம், வடமேற்கு தில்லி ஆம்ஆத்மி வேட்பாளர் ராக்கி பிர்லா வாக்குப்பதிவு மையங்களைப் பார்வையிடச் சென்றார். அப்போது அவரது கட்சியின் சின்னம் அச்சிடப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டிருந்ததாகப் புகார் வந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் ராய் அறிவுறுத்தியபடி, அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 130(1) -ஆவது பிரிவின் கீழ், மங்கோல்புரி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

     தில்லியில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய கொடி அச்சிடப்பட்ட தொப்பியை அணிந்து பிரசாரம் செய்தததாக ராக்கி பிர்லா மீது பாஜக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai