Enable Javscript for better performance
நொய்டாவில் வணிக வளாகத்தில் தீ- Dinamani

சுடச்சுட

    

    தேசிய தலைநர் வலயம், நொய்டாவில் வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

    இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "நொய்டா 18-ஆவது செக்டரில் "ஜிஓபி பிளாஸா' என்ற வணிக வளாகம் உள்ளது. அதில் தனியார் வங்கி செயல்படும் தளம் தீப்பற்றி எரிவதாக காலை 8.15 மணிக்கு புகார் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து,  சம்பவ இடத்துக்கு நொய்டா, வைஷாலி பகுதிகளிலிருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்'

    என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai