Enable Javscript for better performance
\\\"பேட்டரி\\\' ரிக்ஷாக்கள் திருடிய மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பேட்டரி ரிக்ஷாக்களை திருடும் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

     இதுகுறித்து தில்லி போலீஸ் துணை ஆணையர் (வடமேற்கு) என்.ஞானசம்பந்தன்  செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

     தில்லி முகர்ஜி நகர் பகுதியில் பேட்டரி மூலம் இயங்கும் ரிக்ஷாக்கள் காணாமல் போனதாக மோகினி பாலா என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது மூன்று பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பேட்டரி ரிக்ஷாவை தள்ள முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

     போலீஸாரை கண்டதும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை துரத்திச் சென்றதில் இருவர் சிக்கினர். அவர்கள் அஷ்ரஃப், அன்வர் என்றும், தப்பிச் சென்றவர் சாபு என்றும் தெரிய வந்தது. அவர்கள் முகர்ஜி நகர் பகுதியில் மட்டும் 10-12 பேட்டரி ரிக்ஷாக்களை திருடியதும், அவற்றை உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது என்றார் ஞானசம்பந்தன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai