Enable Javscript for better performance
\\\"பொருளாதார வளர்ச்சி 3 மடங்காக உயர்ந்துள்ளது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பொருளாதார வளர்ச்சி 3 மடங்காக உயர்ந்துள்ளது'

    By புது தில்லி  |   Published on : 19th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""பலவீனமான பிரதமராக மன்மோகன் சிங் இருந்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், தனிநபர் வருமானமும் 3 மடங்கு உயர்ந்திருக்க சாத்தியமில்லை'' என்று பிரதமரின் ஊடகப் பிரிவு ஆலோசகர் பங்கஜ் பச்சௌரி தெரிவித்தார்.

    மன்மோகன் சிங்கை பலவீனமானவர் என்று பிரதமரின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பாரு குற்றம்சாட்டியுள்ள நிலையில், பங்கஜ் பச்சௌரி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

    இது தொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் பங்கஜ் பச்சௌரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பல்வேறு துறைகளின் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும், தனிநபர் வருமானமும் 3 மடங்கு

    உயர்ந்துள்ளன.

    கிராமங்களில் குறைந்தபட்ச ஊதியம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 14 கோடி பேர் வறுமையில் இருந்து மேலோங்கி

    வந்துள்ளனர்.

    இந்த விவரங்கள் மக்களுக்கு சென்றடையவதில்லை. ஏனென்றால் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகிய செய்திகளுக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

    மன்மோகன் சிங் பலவீனமாக பிரதமராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு வளர்ச்சி

    ஏற்பட்டிருக்குமா?

    நாட்டுக்காக மன்மோகன் சிங் கடுமையாக உழைத்து வருகிறார். அதுவே அவரது பெயருக்கு பெருமை சேர்க்கும் என்றும் நம்புகிறார்.

    இதுவரை பிரதமர் 1,198 முறை உரையாற்றியும், ஏராளமான செய்திக்குறிப்புகளை வெளியிட்டும் உள்ளார். அதில், பொருளாதாரம், வளர்ச்சி, விவசாயம், கல்வி, அறிவியல் உள்ளிட்ட துறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    இதுவரை சராசரியாக 3 நாள்களுக்கு ஒரு முறை ஊடகங்களுடன் செய்திகளை அவர் பகிர்ந்துள்ளார். ஆனால் அவற்றை ஊடகங்கள்தான் சரியாக வெளியிடவில்லை.

    நாடாளுமன்றத்தில் அரசியல் ரீதியில் பேசுவதற்கு அவர் முன்னுரிமை அளித்து வந்த போதிலும், போதிய நேரம் கிடைக்காத காரணத்தால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.

     மத்தியில் கூட்டணி அரசால் இது போன்ற வளர்ச்சி ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். எனக்கும் புத்தகம் எழுத வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன் என்று பங்கஞ் பச்சௌரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai