Enable Javscript for better performance
\\\"ராகிங்\\\': நொய்டாகல்லூரி மாணவர்கள் மூவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    "ராகிங்': நொய்டாகல்லூரி மாணவர்கள் மூவர் மீது வழக்கு

    By புது தில்லி,  |   Published on : 19th April 2014 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய தலைநகர் வலயம், நொய்டா ஊடக கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்டதாக அக் கல்லூரி மாணவர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     நொய்டாவில் உள்ள ஊடக கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் இளங்கலை மாணவரிடம் அதே கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர்கள் மூவர் ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் நொய்டா, செக்டர் 39-இல் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், புகாருக்குள்ளான மூன்று மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருவதாக நொய்டா காவல் துணை கண்காணிப்பாளர் சிவராம் யாதவ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai